முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நட்சத்திரம் அருகில்

இந்த மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடம் எது தெரியுமா?

நமக்கெல்லாம் ஆண்டில் சில மாதங்கள், வாரங்கள் மழை பெய்தாலே ஐயோ அப்பா என அலறத் தொடங்கி விடுகிறோம். ஆண்டு முழுவதும் மழை பெய்தால்.. அவ்வளவுதான்.. ஆனால் ஒரு காலத்தில் மாதம் மும்மாரி அதாவது மூன்று முறை மழை பெய்த காலங்கள் எல்லாம் இருந்தன. அதெல்லாம் ஓர் கார் காலம். சரி விஷயத்துக்கு வருவோம்... ஹவாய் தீவில் உள்ள Kauai என்ற இடத்தில் Waialeale மலைப்பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 350 நாட்களும் மழை பெய்கிறதாம். அம்மாடியோவ்... நினைத்தாலே குளிரக்கிறது அல்லவா.

முதல் அதிபர்

நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு அதிபர் கிடைப்பார் என ராபர்ட். எப். கென்னடி கூறியது போல, ஒபாமா அதிபரானார். இவர், ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்தவர்.  2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் இவர் தான்.

நெட்வொர்க் இல்லையா ?

நெட்வொர்க் இல்லாமல் லிபான் ஆப் மூலம் நீங்கள் தொடர்பு கொண்டு பேச முடியும். முதலில் உங்கள் மொபைலில் லிபான் ஆப்பை டவுன்லோடு செய்யவும். பிறகு அதில் ரீச் மி என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்யவும். பிறகு இதில் இருந்து நீங்கள் நெட்வொர்க் இல்லாமல் கால் செய்து கொள்ளலாம்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

புதிய தொழில்நுட்பம்

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்