முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      விளையாட்டு
0

Source: provided

கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக்கியமான நேரத்தில்... 

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இந்த வருடம் பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் ஷசாங்க் சிங் இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் 2 பவுண்டரி 8 சிக்சருடன் 68 (28 பந்துகள்) ரன்கள் குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

புத்துணர்ச்சியை... 

இந்நிலையில் தரமான சுனில் நரைனுக்கு எதிராக அடிக்கக்கூடாது என்று முடிவெடுத்ததாக தெரிவிக்கும் அவர் மற்ற பவுலர்களை வெளுத்து வாங்கியதாக கூறியுள்ளார். அத்துடன் இங்கிலாந்துக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ போன்றவர் தம்மை பாராட்டியது புத்துணர்ச்சியை கொடுத்ததாகவும் தெரிவிக்கும் ஷசாங்க் சிங் இப்போதும் பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

முயற்சித்தேன்... 

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பெவிலியனில் இருக்கும்போது பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தேன். அதில் நல்ல உயரத்துடன் பந்து வருவதாக உணர்ந்தேன். சுனில் நரைனுக்கு எதிராக நாங்கள் சிங்கிள், டபுள் ரன்கள் மட்டும் எடுத்ததில் மகிழ்ச்சி. அதற்கு பதிலாக மற்ற பவுலர்களை அடிக்க முயற்சித்தேன். பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஸ் எனக்கு நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளார். எதிர்ப்புறம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்ட ஜானி பேர்ஸ்டோ போன்றவர் உங்களுக்கு கை தட்டினால் அது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இன்னும் எங்களுக்கு 5 போட்டிகள் இருக்கிறது. எனவே இப்போதும் எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறினார்.

தோல்வி குறித்து... 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில்., 260 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள்தான். இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் சுனில் நரைன் மற்றும் சால்ட் ஆகியோர் பேட்டிங் செய்ததை பார்க்க அற்புதமாக இருந்தது.இந்த போட்டியில் 2 அணிகளின் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த போட்டியில் நாங்கள் 260 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்துள்ளது வருத்தமாக உள்ளது.

தெரியவில்லை... 

தப்பு எங்கு நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இதுபோன்ற முடிவுகளும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து அதற்கு ஏற்றாற்போன்று தயாராக விரும்புகிறோம். இனிவரும் போட்டிகளில் இதைவிட நல்ல திட்டத்துடன் களத்திற்கு திரும்புவோம். சுனில் நரைன் ஆடுவதை பார்க்க அற்புதமாக இருக்கிறது. அவர் களத்திற்கு செல்லும் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுகிறார். நிச்சயம் அவரது இந்த சிறப்பான பார்மை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து