முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை - 2
  2. போன்லெஸ் சிக்கன் - 1/2  கிலோ.
  3. சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்.
  4. வினிகர் - ஒரு ஸ்பூன்.
  5. வெள்ளை மிளகுதூள் - 1/2 ஸ்பூன்.
  6. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  7. காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  8. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  9. சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
  10. கான் பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்.
  11. மைதா மாவு - 2 ஸ்பூன்.
  12. வறுத்த சேமியா - 1/2 கிலோ.
  13. பிரட் கிரம்ஸ் - 100 கிராம்.
  14. குத்தக்கூடிய குச்சிகள் - 15.
  15. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  16. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பௌலில்  2 முட்டையை உடைத்து ஊற்றி வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய ½ கிலோ போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் 1/2 ஸ்பூன் சோயா சாஸ்,வினிகர் ஒரு ஸ்பூன்,வெள்ளை மிளகுதூள் 1/2 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு,இஞ்சி,பூண்டு விழுது  ஒரு ஸ்பூன்,காஷ்மீரி மிளகாய் தூள் 2 ஸ்பூன்,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,சீரக தூள் ஒரு ஸ்பூன் மற்றும் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் கான் பிளவர் மாவு மற்றும் 2 ஸ்பூன் மைதா மாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. இதனுடன் தனியாக எடுத்து வைத்துள்ள முட்டையின்  வெள்ளை கருவை ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு தட்டில் 1/2 கிலோ வறுத்த சேமியா மற்றும் 100 கிராம் பிரட் கிரம்சை.போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. 15 குத்தக்கூடிய குச்சிகளை எடுத்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை எடுத்து குத்தக்கூடிய குச்சிகளில் குத்தி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. இதே போல் மீதம் உள்ள லெக் பீஸ் சிக்கன் துண்டுகளையும்  தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. சேமியா மற்றும் பிரட் கிரம்சை.போட்டு  கலந்து வைத்துள்ள தட்டில் சிக்கனை போட்டு லெக் பீஸ் சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் சேமியா மற்றும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. இதே போல் மீதம் உள்ள லெக் பீஸ் சிக்கன் துண்டுகளையும்  தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  12. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  13. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள லெக் பீஸ் சிக்கனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  14. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்