முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      இந்தியா
CBSE 2023 07-14

புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான செயல்முறையை தொடங்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் செமஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகமானது, அடுத்த கல்வி ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சி.பி.எஸ்.இ. தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 2025-26ம் கல்வி ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொது தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான செயல்முறைகளை உருவாக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

இது தொடர்பாக அடுத்த மாதம் சி.பி.எஸ்.இ. மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் செமஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து