முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
Bom

Source: provided

சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூரில் கடந்த மார்ச் 1-ம் தேதி ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்தது. அதில் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசாவீர் ஹூசைன் சாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக, சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் நேற்று (ஏப். 27) என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த விசாரணை தொடர்பான முழு விவரம், பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து