முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வலிமை ஆக்கும்

சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.

நீண்ட தொலைவு பறக்கும் பறவை இனம் எது தெரியுமா?

றவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.

குட்டி திகில் கதை, Little horror story

மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் எழுதிய மிக சிறிய திகில் கதை   "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."

பூமிக்கு ஆபத்து

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.

உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் கருவி

வயலின் என்பதும் அழகிய இசைக்கருவி. இளையராஜா பாட்டை கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த இசைக்கருவியின் அற்புதம் எப்படி என... இந்நிலையில் உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் இசைக்கருவி எது தெரியுமா.. லேடி ப்ளூன்ட் ஸ்ட்ராடிவேரியஸ் என்பவர் 1721 ஆம் ஆண்டு உருவாக்கிய வயலின் கருவிதான் அதிக விலைக்கு போனது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது இந்த வயலின் இசைக்கருவி சுமார் 121 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஆன் லைன் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இசைக் கருவிகளில் அதிக விலைக்கு விற்ற சாதனையை இது படைத்துள்ளது.

பாஸ்போர்ட்டில் முதன்முறையாக புகைப்படம் ஒட்டும் முறை எப்போது வந்தது தெரியுமா?

பாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? பாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது. ஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும். பாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது. இது 1915 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்