முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      விளையாட்டு
27-Ram-50

Source: provided

ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. மகளிர் தனிநபர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முனேறியுள்ளார் ஜோதி சுரேகா.

ஆண்கள் - மகளிர் அணி...

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணிகள் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி  இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது. அபிஷேக் வர்மா, பிரயன்ஷ்,  பிரதமேஷ் ஆகிய மூவரும் அடங்கிய ஆண்கள் அணி நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.

காம்பவுண்ட் கலப்பு...

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா/ ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர். நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதிக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் அவர் தனிநபர் பிரிவிலும் அரையிறுதிப் போட்டியில் விளையாடவிருக்கிறார். கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான வேட்டையிலும் பிரயன்ஷ் உள்ளார். ரீகா்வ் பதக்க சுற்றுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா எதிர்பார்க்கிறது.

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

இறுதிக்கு முன்னேற்றம்

மகளிர் அணி, ஆடவர் அணி, காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி 3 தங்கம் வென்றனர். இந்நிலையில், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜோதி சுரேகா ரீகா்வ் மகளிர் தனிநபா் பிரிவில் எஸ்டோனியாவின் மரிடா பாஸுடன் அரையிறுதியில் 149-147 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து