முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அமெரிக்காவில் எப்போது முதன்முதலாக இந்திய உணவகம் தொடங்கப்பட்டது

உலக அளவில் இந்திய உணவு வகைகள் மக்களால் விரும்பப்படும் உணவு வகைகளின் டாப் 10 பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. தோராயமாக 24 நாடுகளில் உள்ள மக்களில் 62 சதவீதம் பேர் இந்திய உணவை விரும்புகின்றனர். அதற்கு காரணம் இந்திய உணவு வகைகளில் காணப்படும் பல்வேறு வகையான ரகங்களும், அவற்றில் சேர்க்கப்படும் அரிதான மசாலா மற்றும் மூலிகை பொருள்களும் உலக மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இந்திய உணவகம் 1960களின் மத்தியில் தொடங்கப்பட்டது. பாம்பே மசாலா என்ற உணவகம் தான் பரவலாக கவனம் பெற்றது. தற்போது அமெரிக்காவில் சுமார் 80 ஆயிரம் இந்திய உணவகங்கள் உள்ளன. நியூயார்க் நகரில் தான் அதிக இந்திய உணவகங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக   சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ளன.

பன்முகம் கொண்ட நாடு

உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது.  உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.

கோபுரத்தின் நிழல் தலைகீழாக தெரியும் அதிசய கோயில்

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பண்டைய கட்டிட கலைக்கு சாட்சியமாக விளங்குபவை கோயில்கள். அதிலும் இன்று வரையிலும் பல்வேறு விற்பன்னர்களாலும் அவிழ்க்க முடியாத கட்டிட கலை நுட்பங்களை அவை தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இக்கோயிலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா.. எப்படி தஞ்சை பெரிய கோயிலில் கோபுரத்தின் நிழல் கீழே விழாதோ... அதே போலு இந்த கோபுரத்தின் நிழல் கிழே விழும்போது தலைகீழாக தெரியும். அதாவது ஒரு லென்ஸ் வழியாக கோபுரத்தை படம் பிடித்தால் எப்படி தலைகீழாக காட்சி அளிக்குமோ அது போல அதன் நிழல் அங்குள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கோபுரத்தின் தலை கீழாக விழுவதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். எந்த ஒரு இடை ஊடகமும் இல்லாமல் நிழல் தலைகீழாக மாற என்ன காரணம்?  இதுவரை யாருக்கு புரியாத புதிராக உள்ளது இந்த மர்மம்.

இதுதான் காரணம்

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமான தொப்பை வரக் காரணம், அதிக பணிச்சுமையால், ஆண்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு தொப்பைக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகமாக பீர் குடிப்பதாலும், அதிக நேரம், உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும் ஏற்படுகிறது.

புதிய வசதி

உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது.

குறட்டை விடும் பறவை எது தெரியுமா?

அலகின் நுனியில் நாசித் துவாரங்களை கொண்ட ஒரே பறவை கிவி. இது தரையில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற உணவுக்காக மோப்பம் பிடிக்க உதவுகிறது. அதன் நாசியைத் துடைக்க அடிக்கடி குறட்டை விடுகின்றது. இது ஒரு கோழி இனம். இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றன. இப் பறவை 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் தோன்றியது. இவைகளால் பறக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும். நியூசிலாந்தின் தேசிய சின்னமாக கிவி இடம் பெற்றுள்ளது. தற்போது அழியும் தருவாயில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்