முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள்பணியாற்றி சாதனை படைத்த முதியவர்

ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்;ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேனுக்கு, அவரது பணியிடத்துடனான தொடர்பு மிகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.100 வயது மிக்க வால்டர் ஆர்த்மேன் ஒரே நிறுவனத்தின் கீழ் 84 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இதுவொரு உலக சாதனையும் ஆகும். ஆம்! இந்த ​​100 வயது மிக்க முதியவர், "ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்தவர்" என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்! 1938 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பிரேசிலில் உள்ள சான்டா கேடரினாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ​​நிறுவனத்தில் 'ஷிப்பிங் அசிஸ்டென்ட்' ஆக பணியாற்றத் தொடங்கிய வால்டர் ஆர்த்மேன், தன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் உதவியுடன் மெல்ல மெல்ல தனக்கான வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். இப்படியாக 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து சாதனையும் படைத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம்

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம். இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. பொறியாளர்கள், மின்சார வேலைப்பார்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் விதானத்தின் மேல் ஏறி தேவைப்படும்போது ஜன்னல்களை திறக்க வேண்டும், மூட வேண்டும், பழுது பார்க்க வேண்டும், விளக்குகளை பொருத்த வேண்டும். இதுதான் அவர்களின் பணி. இதுபோக, திருவிழா நாட்களில் 5 ஆயிரம் விளக்குகளும், 1000 தீபங்களும் கொண்டு விதானத்தை அலங்கரிக்கப்பதும் இவர்கள் கையில்தான் இருக்கிறது.  ஆலயத்தின் முன்னாள் ஒரு லட்சம் பேர் கூடுவதற்கேற்ற மிகப்பெரிய சதுக்கம் உள்ளது. இந்த ஆலயம் செயின்ட் பீட்டர் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கும் மேலானது. 1453-ம் ஆண்டு தொடங்கி 1609-ல் முடிவடைந்தது.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உடல் நலத்திற்கு...

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று பொதுவான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும். அத்துடன் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், நல்ல எண்ணம் மற்றும் செயல்பாடுகளால் உடல் நலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது.

தலை இல்லாமல் 1 வாரம் வரை கூட உயிர் வாழும் உயிரினம் எது தெரியுமா?

எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் உடல் இயங்குவதற்கு மூளையும் இதயமும் மிகவும் அடிப்படையானவையாகும். இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் உடல் இயங்க இயலாது. ஆனால் ஒரே ஒரு உயிரினம் மட்டும் தலை இல்லாமல் சுமார் 1 வாரம் காலம் வரை உயிர் வாழும் என்பது ஆச்சரியம் தானே. அது வேறெதுவும் இல்லை. நாம் நம் சமையலறைகளில் பார்க்கும் கரப்பான்கள் தான் அவை. இதற்கு காரணம், அவை சுவாசிப்பதற்கு வாயையோ, மூளையையோ சார்ந்திருக்கவில்லை. அதன் உடல் முழுவதும் உள்ள துளைகள் வாயிலாகவே சுவாசிக்கிறது. அதே நேரத்தில் வாய் இல்லாவிட்டால் கரப்பான் இறந்து விடும். ஏனெனில் உணவு, தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவனாலும் உயிர் வாழ முடியாது தானே.

வான் கோழிகள் ஒரு காலத்தில் கடவுளாக வணங்கப்பட்டன

அமெரிக்காவின் பிரபலமான உணவு வகைகளில் வான்கோழி இறைச்சியும் ஒன்றாகும். ஆனால் இன்றைக்காக வளர்க்கப்படும் வான்கோழிகள் ஒரு காலத்தில் தெய்வீக அம்சம் கொண்டவகையாக வணங்கப்பட்டு வந்துள்ள. கிமு 300 களில் மயன் நாகரிக மனிதர்கள் தான் வான்கோழியை வணங்கி வந்துள்ளனர். அவர்களின் முக்கிய மத சடங்குகளில் வான்கோழி பிரதான பங்கு வகித்து வந்துள்ளன. மயன் நாகரிகத்தில் ஆற்றல் மற்றும் பெருமையின் அடையாளமாக விளங்கின. அவர்களின் பல்வேறு தொல் எச்சங்களிலும் வான்கோழிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன என ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்