முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கண்ணும் கருத்துமாக

கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும். மேலும், நீர் வடிந்தால் கண்கள் சோர்வடைந்துள்ளது என அர்த்தம்.

ஆதாரை ஈஸியாக லாக் செய்ய..

உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு மோசடி செய்பவர்களால் அணுகப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு  தனது ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. Lock/Unlock செய்வது எப்படி? https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்லவும்.‘Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ‘Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும். UID பட்டனை செலக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும். Send OTP’ என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும். இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும். மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகிவிடும். அவ்வளவுதான்.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

தீக்குச்சிகள் எப்போது பயன்பாட்டுக்கு வந்தன

பழங்கால மனிதன் தீயைக் கண்டுபிடித்தபோதே முதல் தீக்குச்சி வடிவமைக்கப்பட்டதாகக் கருதலாம். தற்காலத் தீக்குச்சிகள், குறைவான வெப்ப நிலையிலேயே தீப்பிடித்துக்கொள்ளும் பாஸ்ஃபரஸ் (phosphorus) கண்டறியப்பட்ட பின்னர் உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்திப் பல்வகை வடிவிலான தீக்குச்சிகள் வடிவமைக்கப்பட்டன.முதலாவது பாதுகாப்பான தீக்குச்சிப் பெட்டிகள் (safety matches) 1844ஆம் ஆண்டு ஸ்வீடனில், நச்சுத் தன்மையற்ற சிகப்புப் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டன. தீப்பிடித்து எரிவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களையும் தீக்குச்சியின் தலைப் பகுதியில் சேர்க்காமல், சிகப்புப் பாஸ்ஃபரஸை பக்கவாட்டுச் சுவர்ப் பகுதியில் பூசி, தீக்குச்சியை அதில் உராயச் செய்து தீயை உண்டாக்கும் வகையில் தீப்பெட்டி செய்யப்பட்டது.

பெண்களுக்கு மட்டும்

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன.

ஆக்டோபஸ் அதிசயங்கள் : 3 இதயம், 9 மூளை, நீல ரத்தம்

ஆக்டோபஸ் என்ற உயிரனத்தை நாம் அறிவோம். ஆனால் அதன் உடலில் சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது. ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது.  மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது. அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட  கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்