முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      இந்தியா
Mamata-Banerjee--2024-04-27

கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று  ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார். உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள தன் வீட்டில், மம்தா பானர்ஜி தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கினார். மருத்துவமனையில் மம்தாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

நெற்றியில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மம்தா வெளியிட்டார். தற்போது அவர் குணமடைந்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வாக்காளர்களுக்கு டீ போட்டு கொடுத்து, நடனமாடி மம்தா ஓட்டு சேகரித்தார்.

இந்நிலையில், நேற்று துர்காபூரில் ஹெலிகாப்டரில் ஏறிய பின் இருக்கையில் அமரும் போது மம்தா தடுமாறி கீழே விழுந்தார். இதில் மம்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். இவர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவது வழக்கமானதாக ஆகி விட்டது.

கடந்த 2021-ம் ஆண்டும் சட்டசபை தேர்தலின் போது, அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. சில நாட்களாக அவர் வீல் சேரில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

பின்னர், அவர் தனது திட்டமிடப்பட்ட பயணத்தைத் தொடர்ந்தார். மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து