முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் புதிய சாதனை படைத்த கோலி

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

பெங்களூரு : பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

173 கேட்ச்சுகள்...

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முன்னதாக இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டிங் செய்கையில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் ஆகிய 2 வீரர்கள் கொடுத்த கேட்சை கச்சிதமாக பிடித்த விராட் கோலி பீல்டிங்கில் அசத்தினார். இந்த 2 கேட்ச்சுகளையும் சேர்த்து சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் இதுவரை விராட் கோலி 173 கேட்ச்சுகளை பிடித்துள்ளார்.

117 கேட்சுகள்...

குறிப்பாக இந்தியாவுக்காக 52 கேட்ச்சுகளை பிடித்துள்ள அவர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக 117 கேட்ச்சுகளையும் மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 4 கேட்ச்சுகளையும் பிடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய வீரர்கள் பட்டியல்:

1. விராட் கோலி : 173.

2. சுரேஷ் ரெய்னா : 172.

3. ரோகித் சர்மா : 167.

4. மனிஷ் பாண்டே : 146.

5. சூர்யகுமார் யாதவ் : 136.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து