முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
Fisher-Boat

சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15 ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று,  கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 15 தமிழ்நாட்டு மீனவர்களை,  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.  இதனைத் தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 21 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

சிறை காவல் முடிந்து,  மீனவர்கள் நேற்று (மார்ச்.27) இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  காரைக்கால் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களில் ஒரு படகோட்டிக்கு ஆறுமாத சிறைதண்டனையும்,  மீதமுள்ள 14 மீனவர்கள் விடுதலையும் செய்யப்பட்டனர். அதே போன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரில் ஒரு படகோட்டிக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, மீதமுள்ள 19 நபர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து