முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கார் விபத்து: இந்திய பெண் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2024      உலகம்
Accident-1

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷி (21) என்ற பெண் உயிரிழந்தார். இத்தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய துணை தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 

பென்சில்வேனியாவில் கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஜோஷியின் குடும்பம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. 

அவரது உடலை விரைவில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து