முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேபாளத்தில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2024      உலகம்
Nepal 2024-03-24

Source: provided

காத்மண்டு : நேபாளம்  தலைநகர் காத்மண்டு மற்றும் நாடு முழுவதும் உள்ள மலைப்பாங்கான மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

இருப்பினும், நாட்டின் தெற்கு சமவெளிப் பகுதியான தேரையில், ஹோலி திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. நேபாள ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு,

ஹோலி சமூகத்தில் பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நேபாள மக்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கான தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி பௌடெல், ஹோலி பண்டிகையை அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம் என்று விவரித்தார்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேபாள போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளத்தாக்கில் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க டிரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ஹோலி பண்டிகையின்போது போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சுமார் 100 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.  

அனுமதியின்றி யாரேனும் மக்கள் மீது வண்ணங்களை தெளித்தோ அல்லது தண்ணீரை வீசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு போக்குவரத்து காவல்துறை அலுவலகம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக குறைந்தது 250 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து