முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 9 மே 2024      ஆன்மிகம்
Kedarnath--Yatra

டேராடூன், ‘சார் தாம்’ யாத்திரையை முன்னிட்டு கேதர்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் இன்று தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கேதர்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு கங்கோத்ரி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதே சமயம், பத்ரிநாத் கோவிலின் நடை வரும் 12-ந்தேதி காலை 6 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கேதர்நாத் கோவிலில் மலர் அலங்காரங்கள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து