முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      விளையாட்டு
Delhi-Cricket-Team-2024-04-

புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

குஜராத் பந்துவீச்சு...

புதுடெல்லி அருண் ஜெய்ட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியர் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

225 ரன்கள் இலக்கு...

குஜராத் அணி 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் எதிர்பாராத விதமாக 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷனுடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சாஹா. பின்னர் சாஹா 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்மதுல்லா ஓமர்சாய் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் மில்லர்... 

சாய் சுதர்ஷன் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் தெவாட்டியா ஆகியோர் ஸ்வரப் ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த டேவிட் மில்லர் 18-வது ஓவரில் அவுட் ஆனார். சாய் கிஷோர் 2 சிக்ஸர்கள் விளாசி 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

4 ரன்களில் வெற்றி... 

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரஷித் கான் இருந்தார். அந்த ஓவரை முகேஷ் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசினார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தில் குஜராத் அணியின் ரன் எடுக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருந்தது குஜராத் அணி. அதன் மூலம் 4 ரன்களில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

சிறப்பான பீல்டிங்...

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 19-வது ஓவரில் டெல்லி அணியின் ஸ்டப்ஸ், பவுண்டரி லைனில் அபாரமாக செயல்பட்டு ஒரு சிக்ஸரை தடுத்தார். வெறும் ஒரு ரன் மட்டுமே அந்த பந்தில் குஜராத் அணி எடுத்தது. ஸ்டப்ஸ் தடுத்த அந்த 5 ரன்கள் குஜராத் அணியின் வெற்றியை பறித்தது என்றும் அதை சொல்லலாம். டெல்லி அணி வீரர்கள் ஃபீல்டிங் பணியை சிறப்பாக செயல்பட்டனர்.

ரிஷப் ஆட்ட நாயகன்...

கடைசி ஓவரில் மோகித் சர்மாவுக்கு ரஷித் கான் ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பந்த் வென்றார். இந்த போட்டிக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 4 வெற்றிகளுடன் முறையே 5, 6, 7 ஆகிய இடங்களில் ரன் ரேட் அடிப்படையில் உள்ளன.

வெற்றி குறித்து...

வெற்றி குறித்து ரிஷப் பந்த் தெரிவிக்கையில்.,  டி20 என்பது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. 14 - 15 ஓவர்கள் முடிந்ததும் பந்து நன்றாக வந்தது. எனவே ரசிக் தார் சலாம் மீது நம்பிக்கையை வைக்க விரும்பினோம். ஒரு போட்டியில் நன்றாக பந்து வீசும் ஒருவரை நாங்கள் எப்போதும் நம்புவோம். அதனாலேயே அவரை 19-வது ஓவரில் பயன்படுத்தினேன். இது போன்ற விஷயங்கள் கேப்டனாக உங்களுடைய உள்ளுணர்வில் கிடைக்கும். அது வேலை செய்ததில் மகிழ்ச்சி. களத்தில் ஒவ்வொரு மணி நேரமும் இருப்பதை விரும்பும் நான் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல் சிக்சர் அடித்ததும் எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது" என்று கூறினார்.

தோல்வி குறித்து...

தோல்வி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்:- உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் நல்ல ஒரு கிரிக்கெட்டை விளையாடினோம். இருப்பினும் இறுதியில் தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் அணியில் உள்ள அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். 224 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தும்போது எவ்வித திட்டத்தையும் பற்றி பேச தேவையில்லை. மைதானத்தில் இறங்கியதில் இருந்து ரன்களை குவிக்க வேண்டியது மட்டும்தான் நம்முடைய வேலை. ஐ.பி.எல். போட்டிகளில் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பது ஒவ்வொரு அணிக்கும் கூடுதல் சவுகரியத்தை அளிக்கிறது. நிச்சயம் இனி வரும் போட்டிகளில் இது தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து