முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 17-ம் மீண்டும் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

புதன்கிழமை, 8 மே 2024      உலகம்
Sunita-Williams 2024-05-07

வாஷிங்டன், விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 17-ம் மீண்டும் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. விண்வெளி நிலையத்தில் 322 நாள்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் நேற்று முன்தினம் செல்லவிருந்தார்.

அந்த நாட்டின் போயிங் நிறுவனம் ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கி வருகிறது. அந்த ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவிருந்த ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்லவிருந்தார். 

 

ஆனால், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்தது. இந்த நிலையில், புதிதாக ஆக்சிஜன் குழாய் மாற்றப்பட்டு வருகின்ற 17-ஆம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து