முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் காலஹன்டியில் பாஜக வேட்பாளர் விஜய் சங்கல்ப்பை ஆதரித்த ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் வரை அனைவரும் வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்தாலும் அவை அனைத்தும் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வறுமையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மோடியின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங், இது பாஜக கூறியதல்ல, நிதி ஆயோக் அறிக்கை என்று அவர் கூறினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி செய்தது போல் முந்தைய எந்த அரசும் செய்ததில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் வீடு, குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பம் இருக்காது. மக்களவை மற்றும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து