முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
Jail

Source: provided

பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த. கட்சித் தலைவர் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14-ம் தேதி வரை நீதிமனறக் காவல் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவெகௌடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி ஆகியோர் மீது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து வைத்திருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாகக் கூறி புதிதாக வழக்கும்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சிறப்புப் புலனாய்வு குழு போலீஸார் அவரை அதிரடியாக கைது செய்து, மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில், 3 நாள் போலீஸ் காவலில் இருந்த ரேவண்ணா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து