முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      அரசியல்
Telangana-Kushbu-2024-04-28

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் தொடங்கினார். வேலூரில் பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து நடிகர் குஷ்பூ பிரச்சாரம் செய்த அவர் திடீரென்று பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரச்சாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செகந்திராபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டியை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார். அவர் தனது ரசிகர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து