முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
Trichy-Srirangam--Jharkhand

திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில கவர்னரும்,  தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார், மூலவர், பெரிய பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார். 

கோவிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து