முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, கேரளாவில் மொத்தமுள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 26ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 71.16 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி (வயது 51) 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக முகமது சஜி மீது போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜி உடனே ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து