முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      இந்தியா
aravind-singh-2024-04-28

புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. முக்கிய கட்சிகளாக உள்ளன. அதேவேளை, பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா, டெல்லி காங்கிரஸ் உள்விவகாரத்தில் தலையிடுவதாக கூறி அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக் கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து