முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தம் ஆலு

Cooking time in minutes: 
20
Ingredients: 
தம் ஆலு செய்யத்தேவையான பொருட்கள்.
  1. சிறிய உருளைக்கிழங்கு - முக்கால் கிலோ.
  2. ஊற வைத்த மிளகாய் வத்தல் - 10.
  3. தயிர் - 1 கப்.
  4. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  5. பட்டை - 1.
  6. கிராம்பு - 4.
  7. சோம்பு - 1/4 ஸ்பூன்.
  8. இஞ்சி - 1 துண்டு.
  9. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  10. பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்.
  11. சோம்புத்தூள் - 1 ஸ்பூன்.
  12. கரம் மசாலாத்தூள் -1 ஸ்பூன்.
  13. பொடியாக நறுக்கியமல்லி இலை - சிறிதளவு.
  14. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  15. உப்பு - தேவையான - அளவு.
Method: 

செய்முறை ;-- 

அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி  முக்கால் கிலோ சிறிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வேக வைத்து  தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்து  வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய்  சூடானவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை குச்சியால் 2 ஓட்டைகளை போட்டு பின்னர் அதை எண்ணெயில் போட்டு  பொரிக்கவும்.

திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மிக்சி ஜாரில் ஊற வைத்த 10 மிளகாய் வத்தலை போட்டு  நன்றாக  அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தயிர்,ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் மிக்சி ஜாரில் அரைத்த மிளகாய் விழுதை ஊற்றி  தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு  எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய்  சூடானவுடன் ஒரு  பட்டை,4  கிராம்பு,சோம்பு 1/4 ஸ்பூன்,நீளமாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,மிளகாய் தூள்  2 ஸ்பூன்,பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,சோம்புத்தூள்ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் போட்டு,மிளகாய் விழுது கலந்த தயிரை ஊற்றி கலந்து விடவும்.

இதனுடன் வறுத்து வைத்துள்ளஉருளைக்கிழங்கை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.

10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கலந்து விட்டு,பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு கலந்து விடவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். 

சுவையான தம் ஆலு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்