முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

செட்டிநாடு பரங்கிக்காய் புளிக்கறி

Cooking time in minutes: 
20
Ingredients: 

செட்டிநாடு பரங்கிக்காய் புளிக்கறி செய்யத் தேவையான பொருட்கள்.

  1. நறுக்கிய பரங்கிக்காய் - 2 பீஸ்.
  2. வெந்தயம் - 1/4 ஸ்பூன்.
  3. கடுகு,உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்.
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
  6. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 15.
  7. பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
  8. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  9. சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்.
  10. வெந்தயதூள் - 1/2 ஸ்பூன்.
  11. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  12. கரம் மசாலா - 1 ஸ்பூன்.
  13. மிளகாய்  தூள் - ஒரு ஸ்பூன்.
  14. புளி - 25 கிராம்.
  15. வெல்லம் - 1 ஸ்பூன்.
  16. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்.
  17. உப்பு -தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாய் வைத்து  3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  2. நல்லெண்ணெய் சூடானவுடன் 1/4 ஸ்பூன் வெந்தயம்,கடுகு,உளுந்தம் பருப்பு 1/2 ஸ்பூன் ,பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  3. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 15 சின்ன வெங்காயம்,பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  4. இதனுடன்  நறுக்கிய  2 பீஸ் பரங்கிக்காய்,சோம்பு தூள் 1/2 ஸ்பூன், வெந்தயதூள் 1/2 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,கரம் மசாலா ஒரு ஸ்பூன்,மிளகாய்  தூள்  ஒரு ஸ்பூன்  தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  5. இதனுடன் 25 கிராம் புளியை எடுத்து புளி கரைசலை தயார் செய்து ஊற்றி நன்றாக கலந்து விட்வும்.
  6. கடாயை மூடி போட்டு மூடி பரங்கிக்காயை 10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
  7. 10 நிமிடம் கழித்து  மூடியை திறந்து ஒரு ஸ்பூன் வெல்லத்தை போட்டு நன்றாக கலந்து விட்வும்.
  8. பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை தூவி இறக்கவும்.
  9. சுவையான செட்டிநாடு பரங்கிக்காய் புளிக்கறி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்