முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் டிக்கா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சிக்கன் டிக்கா செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 600 கிராம்.
  2. எலுமிச்சம்பழ சாறு - 3 ஸ்பூன்.
  3. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  4. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  5. தயிர் - ஒரு ஸ்பூன்.
  6. சீரக மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
  7. சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்.
  8. கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
  9. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  10. கரம் மசாலா - 1 ஸ்பூன்.
  11. காஷ்மீரி மிளகாய் தூள் - 6 ஸ்பூன்.
  12. ரெட் சில்லி சாஸ் - சிறிதளவு.
  13. எண்ணெய் – 4 ஸ்பூன்.
  14. பட்டர் - ஒரு ஸ்பூன்.
  15. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 600 கிராம் போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்,இதனுடன் தேவையான அளவு உப்பு,எலுமிச்சம்பழ சாறு 3 ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை 25 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தயிர்,சீரக மசாலா தூள் 1/2 ஸ்பூன்,சோம்பு தூள் 1/2 ஸ்பூன்,கஸ்தூரி மேத்தி ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,கரம் மசாலா ஒரு ஸ்பூன்,காஷ்மீரி மிளகாய் தூள் 6 ஸ்பூன்,ரெட் சில்லி சாஸ் சிறிதளவு,தேவையான அளவு உப்பு மற்றும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை  போட்டு  நன்றாக கலந்து விட்டு சிக்கனை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் மற்றும்  ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
  4. பட்டர் உருகியதும் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு கடாயை மூடி போட்டு மூடி நன்றாக வேக வைக்கவும்.
  5. முடியை திறந்து சிக்கனை திருப்பி போட்டு ஒரு பிரஸ் மூலம் கடாயில் உள்ள மசாலாவை சிக்கன் துண்டின் மேல் தடவி வீட்டு நன்றாக வேக வைக்கவும்.
  6. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  7. சுவையான சிக்கன் டிக்கா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்