முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

எள்ளு சாதம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

எள்ளு சாதம் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. அரிசி - 1/2 கிலோ.
  2. எள்ளு - 100 கிராம்.
  3. உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
  4. பெருங்காய தூள் 1 டீஸ்பூன்.
  5. மிளகாய் வத்தல் - 4. 
  6. நல்லெண்ணெய் - சிறிதளவு.
  7. கடுகு,உளுந்து - 1 ஸ்பூன்.
  8. பச்சை மிளகாய் - 2.
  9. கறிவேப்பிலை - சிறிதளவு. 
  10. ஒரு எலுமிச்சம் பழம் -1.
  11. உப்பு - தேவையான அளவு. 
Method: 
செய்முறை ;-
  1. அடுப்பில் குக்கரை வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றி 1/2 கிலோ அரிசியை  போட்டு 4 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 100 கிராம் எள்ளை  போட்டு நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்புபை போட்டு வறுக்கவும்,இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காய தூள் போட்டு நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 4 மிளகாய் வத்தலைப் போட்டு  நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. மிக்சி ஜாரில்,கடாயில் வறுத்த எள்ளு,மிளகாய் வத்தல்,உளுந்து, பெருங்காயம், ஆகியவற்றை போட்டு நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு,உளுந்து போடவும்,இதனுடன் நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
  8. ஒரு பாத்திரத்தில் குக்கரில் வடித்த சாதத்தை எடுத்துக்கொள்ளவும்.
  9. இதில் ஒரு எலுமிச்சை பழ சாறை ஊற்றி,கடாயில் தாளித்தவற்றை போட்டு இதனுடன்,மிக்சி ஜாரில் அரைத்த எள்ளு பொடி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
  10. சுவையான எள்ளு சாதம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்