முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடையில் போலீஸ் சோதனை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
TTF-Vasan-2024-05-22

சென்னை, பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூட்யூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பைக் ரேஸரும்,  பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்,  போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 ஆண்டுக்கு ரத்து செய்தது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், சிறைக்கு சென்று திரும்பிய பிரபல யூடியூபர் டிடி எஃப் வாசன்  சென்னை அயப்பாக்கத்தில் இருச்சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்,  இதனால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் பிரதமர் அலுவலகத்தில் புகார் சென்றிருந்தது.

அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையரக உத்தரவின் பேரில் அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜி பரந்தாமன் தலைமையில் அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள டிடி எஃப் வாசன் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு விலை உயர்ந்த சைலென்ஸர் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.  உடனடியாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்களை விற்பனை தடை விதித்து போக்குவரத்து காவல் துறையினர், யூடியூபர் டிடி எஃப் வாசனுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து