முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மெட்ரோ ரயிலில் வாசகம்: கைதான வாலிபரிடம் போலீசார் விசாரணை

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
Kejrival 2024-01-05

புது டெல்லி, மெட்ரோ ரயிலில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது குறித்து கைதான வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி இருந்தது. 

மேலும் சுவற்றில் வரையப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு உள்ளனர். சி.சி.டி.வி. கேமரா உள்ளது. அப்படி இருந்தும் போலீசார் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மாநில அமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பி இருந்தார்.

மெட்ரோ ரயில்களுக்குள்ளும், ரயில் நிலையங்களிலும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக ஆம் ஆத்மி புகார் அளித்து இருந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். 

சி.சி.டி.வி. காட்சியில் சைன்போர்டுகளில் ஒரு இளைஞர் சுவர்களில் எழுதுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். 

பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து