முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது  என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் வனத்துறை 29.4.2024 அன்று யானை வழித்தடம் குறித்த ஒரு வரைவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ் விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும். 

இந்த வரைவு அறிக்கையினால் தமிழகத்தின் பல்வேறு வனப்பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் அச்சத்திற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகி உள்ளனர். ஒரே வருடத்தில் யானை வழித் தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் தி.மு.க. அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு, யானை வழித்தடங்களை அறிவிக்கும் முன்பு, தமிழில் விரிவான வரைவு அறிக்கையினை வெளியிட்டு, மலைவாழ் மக்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கி, முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து