முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      இந்தியா
Mani-Shankar-Iyer 2024-05-1

Source: provided

புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அவர்களிடம் அணுகுண்டு இருக்கிறது. அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அங்கு ஒரு மோசமான மனிதர் அதிகாரத்திற்கு வந்து அணுகுண்டை பயன்படுத்தி விட்டால், அதன் பாதிப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் மணிசங்கர் பேசியது அவரது சொந்த கருத்து என்றும், அவரது கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

பிரதமர் மோடியின் அர்த்தமற்ற பேச்சுக்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மணிசங்கர் ஐயரின் பழைய காணொலியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. அவரது கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அவர் கட்சிக்காக பேசவில்லை  என்று தெரிவித்துள்ளார். 

மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தீர்க்கமான மற்றும் உறுதியான தலைமையில், நமது ஆயுதப் படைகளின் வீரத்தால் கடந்த 1971 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உடைந்து சுதந்திர வங்கதேசம் உதயமானது என்பதை காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசமும் பெருமையுடன் நினைவு கூர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

கடந்த 1974-ம் ஆண்டு மே 18-ம் தேதி இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியாவின் அணுசக்தித் திறன் உலகிற்கு அறிவிக்கப்பட்டதாகவும், நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தேசநலன் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருவதாகவும் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து