முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20-யில் 12 ரன்னில் ஆல்அவுட்: மங்கோலியா மோசமான சாதனை

வியாழக்கிழமை, 9 மே 2024      விளையாட்டு
9-Ram-51

Source: provided

கேப்டவுன்: டி-20-யில் 12 ரன்களில் ஆல்அவுடாகி மங்கோலியா மோசமான சாதனை படைத்துள்ளது.

மங்கோலியா அணி... 

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2017-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்னில் ஆல்அவுட் ஆனது. டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஸ்கோர் இது என பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக மங்கோலியா அணி 12 ரன்னில் சுருண்டது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே இது 2-வது மிகவும் குறைந்த ஸ்கோராக பார்க்கப்படுகிறது.

5 விக்கெட்கள்...

ஜப்பான் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மங்கோலியா 8.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 12 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஜப்பான் வேகப்பந்து வீச்சாளர் கஜுமா கட்டோ-ஸ்டாஃபோர்டு 3.2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

10 ரன்களில் அவுட்...

இதற்கு முன்னதாக ஸ்பெயின் அணிக்கெதிராக இஸ்லே ஆஃப் மான் ((the Isle of Man) பிரிட்டிஷ்- அயர்லாந்து இடையிலான தீவு) 10 ரன்களில் ஆல்அவுட் ஆனது டி20 வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் ஆகும். 12 ரன்னில் 3 ரன்கள் உதிரியாக வந்ததாகும். 11-வது வீரராக களம் இறங்கிய வீரர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஆறு பேர் டக்அவுட் ஆனார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து