முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Seenuramasamy 2024-05-06

Source: provided

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன.

இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் பார்வைக்கு வராமலேயே போய் விடுகின்றன.  தற்போது உள்ள சில ஓடிடி தளங்களை பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதால் இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் துவங்கியுள்ளது.

இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ் தளம். இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். இந்த நிகழ்வில் ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்துப் பேசிய இயக்குநர் சீனுராமசாமி, “இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று வாழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து