முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரண்மனை 4 விமர்சனம்

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Palace-4-Review 2024-05-06

Source: provided

சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4. இப்படத்தில் முதன்மை வேடத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா நடித்திருக்கிறார்கள். அரண்மனை ஒன்று இரண்டு மூன்று பாகங்களை எடுத்து வெற்றி பெற்றதையடுத்து இப்போது நான்காம் பாகத்தையும் நடித்து, இயக்கியிருக்கிறார் சுந்தர் சி,. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஊரை விட்டு ஓடி சென்று சந்தோஷ் பிரதாப்புடன் காதல் திருமணம் செய்து கொள்கிறார் தமன்னா.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு கட்டத்தில் தமன்னா தற்கொலை செய்து கொள்ள அவருடைய கணவரும் உயிரிழக்கிறார். இந்த தகவல் தமன்னாவின் சகோதரரான சுந்தர் சி க்கு கிடைக்கிறது. இதைத் தொடர்ந்து தங்கையின் வீட்டிற்கு செல்லும் அண்ணன் சுந்தர் சி, இருவரின் இறப்புக்கு பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து பழிவாங்கும் கதைதான் அரண்மனை 4 கதை.

யோகி பாபு - விடிவி கணேஷ்- கோவை சரளா  மொட்டை ராஜேந்திரன்- - சேசு என ஒரு பெரிய கமெடி பட்டாளத்தையே நடிக்க வைத்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.  சுந்தர் சி வழக்கமான பாணியில் அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கி ரசிக்க வைக்கிறார். நடிப்பைவிட அவரது இயக்கம் சிறப்பாக இருக்கிறது. அரண்மனை 4 – பார்த்து ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து